வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்வதற்கான வயதில் திருத்தம்: அமைச்சரவை தீர்மானம்

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்வதற்கான வயதில் திருத்தம்: அமைச்சரவை தீர்மானம் 0

🕔21.Jun 2022

இலங்கைப் பெண்கள் – வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களுகளாகச் செல்வதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தற்போது, இலங்கைப் பெண்கள் – வீட்டுப் பணியாளர்களாக சஊதி அரேபியாவில் பணிபுரிய குறைந்தபட்ச வயது 25 வயதும், மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிவதற்கு 23 வயதும், மற்ற நாடுகளில் 21 வயதும் நிரம்பியவராக இருக்க

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21ஆவது திருத்தம்: நீதிமன்றின் அறிவிப்பை, சபாநாயகர் வெளியிட்டார்

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த 21ஆவது திருத்தம்: நீதிமன்றின் அறிவிப்பை, சபாநாயகர் வெளியிட்டார் 0

🕔21.Jun 2022

ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களை நிறைவேற்ற, மூன்றில் இரணை்டு பெரும்பான்மையும் பொதுசன வாக்கெடுப்பும் அவசியம் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் குறித்த தீர்மானத்தை இன்றைய (21) நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் பல சரத்துகள்

மேலும்...
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி, கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி, கல்முனையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Jun 2022

– பாறுக் ஷிஹான் – எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி ஆசிரியர்கள்  கல்முனையில் நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கல்வி  சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டுமெனக் கோரி, சம்பந்தப்பட்டவர்கள்   உடனடி நடவடிக்கை எடுக்குமாறு – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பீடு

மேலும்...
சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர், நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது

சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர், நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது 0

🕔20.Jun 2022

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரைத் தாக்கியமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜகத் சமந்த – எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு

மேலும்...
பிரதமர் மற்றும் சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கு இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை

பிரதமர் மற்றும் சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கு இடையே கொழும்பில் பேச்சுவார்த்தை 0

🕔20.Jun 2022

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் நடந்துள்ளது. கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 பேர் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ள நிலையில், ஜூன் மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தமது பணியை தொடர

மேலும்...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவருக்கு 03 லட்சம் ரூபா அபராதம்: சம்மாந்துறை நீதிமன்றம் தீர்ப்பு

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தவருக்கு 03 லட்சம் ரூபா அபராதம்: சம்மாந்துறை நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔17.Jun 2022

அரிசியை நிர்ணய விலையை மீறி, அதிக விலைக்கு விற்பனை செய்த நிந்தவூர் பிரதேச அரிசி ஆலை உரிமையாளர் ஒருவருக்கு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் 03 லட்சம் ரூபாவை அபராதமாக இன்று (17) விதித்து தீர்ப்பளித்தது. அரிசி ஆலைகள் – அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாகக் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, அண்மையில் அம்பாறை மாவட்டத்தில், அம்பாறை மாவட்ட

மேலும்...
பொருளார சிக்கலைத் தீர்க்க தேநீரை குறைவாக குடியுங்கள்: அமைச்சர் கோரிக்கை

பொருளார சிக்கலைத் தீர்க்க தேநீரை குறைவாக குடியுங்கள்: அமைச்சர் கோரிக்கை 0

🕔15.Jun 2022

தேநீர் குடிப்பதை குறைத்துக் கொண்டால் பாகிஸ்தான் அரசுக்கு உண்டாகும் இறக்குமதிச் செலவு குறையும் என்றும், அதன் மூலம் மோசமான பொருளாதார சூழ்நிலையை சீர்படுத்த முடியும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஆசன் இக்பால் கூறியுள்ளார். இவர் பாகிஸ்தானின் திட்டம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களுக்கான அமைச்சராக உள்ளார். பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்பொழுது மிகவும் குறைவாக உள்ளது.

மேலும்...
இலங்கையர்களில் 66 வீதமானோர் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

இலங்கையர்களில் 66 வீதமானோர் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2022

இலங்கையர்களில் 66 வீதமானவர்கள் தினசரி உண்ணும் உணவுகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கம் இணைந்து ஏப்ரல் மாதம் நடத்திய உணவு பாதுகாப்பு மதிப்பீட்டில் இது தெரிய வந்துள்ளது. இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை ஆய்வு செய்தபோது 86 சதவீதம் பேர்

மேலும்...
‘ஸ்ரீலங்கன்’ விமான நிறுவனத்தின் கடந்த வருட நட்டம் 4567 கோடி: அதிகாரி ஒருவரின் சம்பளம் 31 லட்சம்: கோப் குழு அறிக்கையில் தெரிவிப்பு

‘ஸ்ரீலங்கன்’ விமான நிறுவனத்தின் கடந்த வருட நட்டம் 4567 கோடி: அதிகாரி ஒருவரின் சம்பளம் 31 லட்சம்: கோப் குழு அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔15.Jun 2022

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடந்த வருடத்துக்கான தேறிய நட்டம் 45,674 மில்லியன் ரூபா என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. அத்துடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இத்தகைய நட்டத்தை எதிர்நோக்கிய தருவாயிலும் கூட, உயர் முகாமைத்துவ அதிகாரி ஒருவருக்காக மாதாந்தம் 3.1 மில்லியன் ரூபாவை வேதனமாக செலுத்தியுள்ளனர். இந்தக் கொடுப்பனவுகளுக்கான

மேலும்...
அரிசியை பதுக்கினால், அதிக விலைக்கு விற்றால் அறிவிக்கலாம்

அரிசியை பதுக்கினால், அதிக விலைக்கு விற்றால் அறிவிக்கலாம் 0

🕔15.Jun 2022

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வருவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரி   தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைலையடுத்து, மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாதவகையில் அத்தியவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு அரசு

மேலும்...