கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக நபீல் நியமனம்

🕔 April 6, 2024

– அபு அலா –

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஏ. நபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (06) திருகோணமலையில் வழங்கி வைத்தார்.

அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட நபீல், கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தில் மருத்துவக் கல்வியை முடித்து யுனானி வைத்தியராக 2001.10.15ஆம் திகதி பட்டம் பெற்றதோடு, களனி பல்கலைக்கழகத்திலும் சுதேச வைத்தியத்துறையில் பட்டம் பெற்றார்.

இவர் அம்பாறை மாவட்டம் – வேரான்கட்டுக்கொட, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, மற்றும் நிந்தவூர் ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்திய பொறுப்பதிகாரியாகவும், வைத்திய அத்தியட்சகராகவும் பணிபுரிந்துள்ளதோடு, கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண பிரதி ஆணையாளர் வெற்றிடத்துக்கான இடைவெளியை பூர்த்தி செய்யும் நோக்கில், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தினால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண வைத்தியர்களுக்கான நேர்முக தேர்வில் – அதிக புள்ளிகளைப்பெற்று, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண பிரதி ஆணையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்