ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு
ஜனாதிபதித் தேர்தல் – செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார்.
‘எக்ஸ்’ தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதோடு, ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த அறிவிப்பு நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளார்.