Back to homepage

வட மாகாணம்

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூடப்படும்: அமைச்சர் பிரசன்ன 0

🕔8.Apr 2024

புலிகள் அமைப்பின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு 10 குடும்பங்கள் தங்கியுள்ளன. இதில் 09 குடும்பங்களுக்கு

மேலும்...
உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலக அதிகாரிகள் வடக்கு விஜயம்

உண்மை, நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலக அதிகாரிகள் வடக்கு விஜயம் 0

🕔18.Dec 2023

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகம் (ISTRM) ‘தேசிய ரீதியாக பொது மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்தது. சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூக அமைப்பு பிரதிநிதிகள், பெண் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் கடந்த டிசம்பர் 10

மேலும்...
வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் 1,701 குடும்பங்களே மீள்குடியேற்றப்படவுள்ளன: ‘குவைத் சகாத்’ வீட்டுத் திட்ட நிகழ்வில் அமைச்சர் பிரச்சன்ன தெரிவிப்பு 0

🕔23.Oct 2023

– முனீரா அபூபக்கர் – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இடம்பெயர்ந்த 274,120 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 917,143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி 1,701 குடும்பங்களைச் சேர்ந்த

மேலும்...
பலஸ்தீன் நாடு உருவாக வேண்டும்: தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

பலஸ்தீன் நாடு உருவாக வேண்டும்: தேசிய மீலாத் விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு 0

🕔22.Oct 2023

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிக்கடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்தப் பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச்செயலாளரின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி நிகழ்வில்

மேலும்...
94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை 0

🕔16.Oct 2023

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஒரு டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் எனப்படும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், சுமார் 01 கிலோ ஹெரோயின் மற்றும் 05 கிலோவுக்கும் அதிகமான ஹாஷிஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை

மேலும்...
“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம்

“வரலாற்றில் நீதவான் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்”: நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சுமந்திரன் கோபம் 0

🕔29.Sep 2023

இலங்கையின் சரித்திரத்தில் நீதித்துறைக்கு அதி உச்சமான ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவனம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை

மேலும்...
வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை 0

🕔17.Sep 2023

கடமை நேரத்தில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி. சத்தியமூர்த்தி இது தொடர்பாக தெரிவிக்கையில், “சில சுகாதார ஊழியர்கள் – நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் பதிலாக தங்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி

மேலும்...
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருளுடன் 70 வயது நபர் கைது 0

🕔16.Sep 2023

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த 70 வயதுடைய நபர் ஒருவரை யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 01 கிலோ 40 கிராம் எடையுடைய போதைப்பொருள் இவரிடம் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் பெறுமதி பெறுமதி சுமார் 10 மில்லியன்.ரூபா எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருடன் போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வேனையும் பொலிஸார்

மேலும்...
நீதிமன்றில் வழக்குச் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா ‘மிஸ்ஸிங்’

நீதிமன்றில் வழக்குச் சான்றுப் பொருளாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கஞ்சா ‘மிஸ்ஸிங்’ 0

🕔12.Sep 2023

யாழ்ப்பாணம் – மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த 50 கிலோகிராம் ‘கேரள கஞ்சா’ காணாமல் போயுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சான்றுப் பொருட்களுக்குப் பொறுப்பான நீதிமன்றப் பதிவாளர் தெல்லிப்பளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்தின் மேல் மாடியில், வழக்கின் சான்றுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை

மேலும்...
கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு

கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதற்கான காரணம் கண்டுபிடிப்பு 0

🕔3.Sep 2023

நெடுந்தீவு கடற்கரையில் 04 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2023 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 35 கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 22 முதல் மேற்கு கடற்கரையோரத்தில் 31 கடல் ஆமைகள் கரை ஒதுங்கின. வெளிப்புற பகுதியில் பலத்த சேதம் அடைந்த மூன்று ஆமைகளும் மீட்கப்பட்டன. பின்னர்

மேலும்...
03 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்தவர் கைது

03 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்தவர் கைது 0

🕔30.Aug 2023

‘ஐஸ்’ போதைப்பொருளை அதிகளவில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் – உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிலோ 396 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான அவர் மன்னார் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 03

மேலும்...
நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட்

நாம் 90இல் வெளியேற்றப்பட்டபோது 15 வீதமான காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்தது; இப்போது நிலைமை தலைகீழ்: முசலியில் றிஷாட் 0

🕔28.Aug 2023

அதிகாரத்தில் இருக்கும் போது – மக்களுக்கு நாம் வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் தற்போது வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருக்கின்றன எனவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் – முசலி வை.எம்.எம்.ஏ கிளையின் ஏற்பாட்டில் முசலி தேசிய

மேலும்...
சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் 0

🕔25.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர – அண்மையில் நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதவான் தொடர்பாக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் உரையாற்றியதோடு, அவர்

மேலும்...
தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி

தவறுதலாக குப்பைக்குப் போன நகைகள்: மீட்டுக் கொடுத்த சாவகச்சேரி நகர சபைத் தொழிலாளி 0

🕔22.Aug 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, சுமார் 08 பவுன் தங்க நகைகள், தவறுதலாக பழைய துணிகளுடன் குப்பையில் வீசப்பட்டன. சாவகச்சேரி நகர சபையில் கடமையாற்றும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில், குப்பை மேட்டில் இருந்து அவற்றை தேடியெடுத்து ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (21)

மேலும்...
விளையாட்டுப் போட்டியின் போது மரணித்த மாணவர்களின் உடல்கள் பெருந்திரளானோர் பங்கேற்புடன் நல்லடக்கம்

விளையாட்டுப் போட்டியின் போது மரணித்த மாணவர்களின் உடல்கள் பெருந்திரளானோர் பங்கேற்புடன் நல்லடக்கம் 0

🕔18.Aug 2023

வவுனியாவில் வலய மட்ட விளையாட்டுப் போட்டியின் போது, அங்கிருந்த குழியில் இருக்கும் நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் உடல்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று (18) அடக்கம் செய்யப்பட்டது. வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டி – பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது மைதானத்தின் அருகில் இருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்