உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களுக்கு, ஆளுநர்கள் வழங்கும் நியமனம் சட்ட விரோதமானது: கபே தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களுக்கு, ஆளுநர்கள் வழங்கும் நியமனம் சட்ட விரோதமானது: கபே தெரிவிப்பு 0

🕔5.Jul 2024

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ‘கபே’ அமைப்பு, தேர்தல் ஆணைக்குழுவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ‘கபே’ தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் விசேட கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று (05) வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “கிழக்கு,

மேலும்...
பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை

பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை 0

🕔5.Jul 2024

பிரித்தனியாவில்14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் (Keir Starmer) பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராக கியர் ஸ்டாமர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல் 0

🕔5.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்  தள்ளுபடி செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில்  இடையீட்டு மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி

மேலும்...
போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய நபர், பிஎச்ஐ கொலையில் மாட்டினார்: கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்குரிய குண்டுகளின் எண்ணிக்கை காட்டிக்கொடுத்தது 0

🕔4.Jul 2024

– அஷ்ரப் ஏ சமத் – தீபால் ரொஸான் குமார எனும் பொது சுகாதார பரிசோதகர் (பிஎச்ஐ) கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி காலி – எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை, கல்கிசை பிரசேத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக

மேலும்...
ஹிருணிகாவின் பிணை கோரிக்கை மனு ஒத்தி வைப்பு

ஹிருணிகாவின் பிணை கோரிக்கை மனு ஒத்தி வைப்பு 0

🕔4.Jul 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை இம்மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிணை மனுவுக்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உள்ளதாக நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்ததையடுத்து, விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) ஒத்திவைத்துள்ளது. ஆட்சேபனைகளை எழுத்துமூலம் வழங்க – சட்டமா அதிபருக்கு

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு 0

🕔4.Jul 2024

ஜனாதிபதி பதவிக்காலம் 05 வருடங்கள் என உறுதியாக தான் நம்புவதாகவும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சி.டி. லீனாவ் எனும் தொழிலதிபர் – தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் வழங்கும்

மேலும்...
25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது

25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் கைது 0

🕔4.Jul 2024

மஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் லஞ்சம் பெற்றுக் கொண்ட போது, அவரை லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்தனர். வங்கியிலிருந்து திரும்பிய இரண்டு காசோலைகள் தொடர்பாக வத்தளை – பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ்

மேலும்...
ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம்

ஆசிரியருக்கும் ராணுவ அதிகாரிக்கும் வித்தியாசம் உண்டு: ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஆசிரியர் பணியில் இணைந்துகொள்ளும் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்காக தமது சேவைகளை அர்ப்பணிக்க வேண்டுமெனவும், ஒழுக்கமின்றி ஒரு நாட்டில் கல்வியைப் பேண முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாடசாலைக் கல்வியை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று கூறிய ஜனாதிபதி, இது

மேலும்...
மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்

மஹிந்த கஹந்தகம: அரகலயில் அடிபட்டவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார் 0

🕔3.Jul 2024

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளார். அரகலய எனும் மக்கள் போராட்டம் இடம்பெற்ற போது, 2022 மே 09 ஆம் திகதி நடந்த தாக்குதலில் மஹிந்த கஹந்தகம தாக்குதலுக்குள்ளாகியிருந்தார். அது தொடர்பான படங்கள்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் 0

🕔3.Jul 2024

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் – அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் வழங்கப்படும் வரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை தொழிலதிபர் சி.டி. லெனவ என்பவர் தாக்கல் செய்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் சரியான பதவிக் காலத்தை நீதிமன்றம்

மேலும்...
ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம்

ரணிலை தமது ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்றால், அவர் என்ன செய்ய வேண்டும்: பொதுஜன பெரமுன செயலாளர் விளக்கம் 0

🕔3.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றால், அவரை ஜனாதிபதி வேட்பாளராக்குவது குறித்து பரிசீலிக்கலாம் என – அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் – ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்...
சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி 0

🕔3.Jul 2024

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நேற்று (02) ’போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் மத குருவின் கால் பாத மண்ணை எடுப்பதற்காக –

மேலும்...
கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு 0

🕔3.Jul 2024

கலால் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 105 பில்லியன் ரூபாயை வருமானகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாயை அதிகமாக அந்தத் திணைக்களம் பெற்றிருந்தது. ஜூன் 30ஆம் திகதிக்குள் இந்த வருமானத்தை கலால் திணைக்களம் பெற்றுள்ளதாக அதன் ஆணையாளர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார். “கலால் திணைக்களம் திட்டமிட்டபடி இவ்வருடம் ஜுன்

மேலும்...
கடனை பிந்திச் செலுத்துவதால் கிடைக்கும் 05 பில்லியன் டொலர், மக்களுக்கு பயன்படும்: நிதி ராஜாங்க அமைச்சர்

கடனை பிந்திச் செலுத்துவதால் கிடைக்கும் 05 பில்லியன் டொலர், மக்களுக்கு பயன்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் 0

🕔2.Jul 2024

இலங்கையில் கடன் நிலைபேறுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஆனால் இலங்கையில் உள்ள சில தரப்பினர் தமது அரசியல் இலக்குகளுக்கு அதனை நம்பிக்கையுடன் பார்க்க மறுத்துவிட்டதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும்...
தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு

தேர்தல்களில் போட்டியிட மாட்டேன்: மைத்திரி தெரிவிப்பு 0

🕔2.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஆனாலும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தஹம் சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். இருந்தபோதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தான் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்