Back to homepage

மேல் மாகாணம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி இலங்கையில் அறிவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தல் – செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வரவேற்றுள்ளார். ‘எக்ஸ்’ தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதோடு, ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த அறிவிப்பு நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகத்துக்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 21ஆம்

மேலும்...
பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு

பசில் – ரணில் நேற்றிரவு சந்திப்பு 0

🕔26.Jul 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்பான

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்

ஜனாதிபதித் தேர்தல்: ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார் 0

🕔26.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா – ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப் பணத்தை கையளித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வைப்புத் தொகையை இன்று (26) காலை 8.30 மணி முதல் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு முந்தைய நாளான ஓகஸ்ட் 14ஆம் திகதி

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு 0

🕔26.Jul 2024

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (26) விசேட உரையாற்றிய பிரதமர், பொலிஸ் மா அதிபரின் பதவி தற்போதைக்கு வெற்றிடமாகவில்லை எனவும் கூறினார். தேசபந்து தென்னகோன் – பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு நேற்று முன்தினம் தொடக்கம்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔26.Jul 2024

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்றைய (ஜுலை 26) திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு ஓகஸ்ட் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. எனவே, இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12

மேலும்...
ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி நாளை வெளியிடப்படும்: ஆணைக்குழு அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி நாளை வெளியிடப்படும்: ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔25.Jul 2024

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை 26ஆம் திகதி வெளியிடப்படும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். ‘ஜனாதிபதி தேர்தல் 2024’ எனும் தலைப்பில் இன்று (25) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய

மேலும்...
ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம் 0

🕔24.Jul 2024

ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவாக 3000 ரூபாயை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்தக் கொடுப்பனவு செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்படும் வரை, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். நாட்டில் சுமார் 07 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்தி: சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முன்மொழிவுகளை எதிர்வரும் 09ஆம்

மேலும்...
மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல்

மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல் 0

🕔24.Jul 2024

கொரோனா பாதிப்பின் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்தமைக்காக மன்னிப்புக் கோருவதற்குரியஅமைச்சரவை முடிவை தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டாய தகனத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென நாடாளுமன்றில் வலியுறுத்தினார். “மன்னிப்பு கேட்டு தப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை 0

🕔24.Jul 2024

பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னகோனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (24) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து, பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் உட்பட பல தரப்பினர் 09 அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் மனுக்களில் பொலிஸ் மா அதிபராக

மேலும்...
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முன்மொழிவுகளை எதிர்வரும் 09ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கோரிக்கை

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முன்மொழிவுகளை எதிர்வரும் 09ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கோரிக்கை 0

🕔23.Jul 2024

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். அனைத்து முன்மொழிவுகளையும் MS Wordஇல் Iskoola Pota எழுத்துருவில் 12 அளவில் அதன் மென் பிரதியை

மேலும்...
கோட்டாவின் ‘பாவத்துக்கு’ மன்னிப்புக் கோர, அமைச்சரவை அனுமதி

கோட்டாவின் ‘பாவத்துக்கு’ மன்னிப்புக் கோர, அமைச்சரவை அனுமதி 0

🕔23.Jul 2024

கொவிட் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் நடைமுறையை அமுல்படுத்தியமையினால் – பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரிடமும், அரசாங்கம் சார்பில் மன்னிப்பு கேட்பதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இறந்த நபரின் உடலை அடக்கம் அல்லது தகனம் செய்யும் முறைமையை, இறந்தவர்களின் உறவினர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கும்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலை நிறுத்தக் கோரியவர் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்ட 05 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டது

ஜனாதிபதித் தேர்தலை நிறுத்தக் கோரியவர் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்ட 05 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டது 0

🕔23.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலை நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்த சட்டத்தரணி அருண லக்சிறி – வழக்குச் செலவாக வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை, அவர் இன்று (23) செலுத்தினார். அரசியலமைப்பின் 19வது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி அருண லக்சிறி

மேலும்...
நியமனங்களை ரத்துச் செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

நியமனங்களை ரத்துச் செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் 0

🕔23.Jul 2024

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி கண்காணிப்பு பணிகளுக்காக – முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்

மேலும்...
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் எம்.பி ஹிருணிகாவுக்கு பிணை

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் எம்.பி ஹிருணிகாவுக்கு பிணை 0

🕔22.Jul 2024

மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஹிருணிகா தாக்கல் செய்திருந்த பிணை மனு இன்று (33) ஹிருணிகா கொழும்பு நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்