
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்றைய (ஜுலை 26) திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு ஓகஸ்ட் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது.
எனவே, இன்று முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் வேட்பாளர் பெயர் குறித்து நியமனம் செய்யப்படுவாராயின் 50 ஆயிரம் ரூபாவும், வேறொரு அரசியல் கட்சியினால் அல்லது வாக்காளர் ஒருவரினால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக வைப்பிலிடப்பட வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



