ஜனாதிபதியின் தம்பி மகள் திருமணத்தில் கோட்டா: ரணில், மைத்திரிக்கு அருகில் இருக்கை

🕔 September 26, 2016

gotta-0222னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருடைய மகளின் திருமணத்துக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அருகில், கோட்டாவுக்கு இருக்கையும் வழங்கப்பட்டது.

அரசியல் ரீதியாக வெளியில் இவர்கள் எதிராளிகளாகக் காட்டிக் கொண்டாலும், இவ்வாறான தமது குடும்ப நிகழ்வுகளுக்கு, ராஜபக்ஷக்களை அழைக்குமளவு நட்பினைப் பேணி வருகின்றார்கள் என்பது, சாதாரண பிரஜையொருவருக்கு அதிர்ச்சியான தகவல்தான்.

ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவின் மகளுடைய திருமண நிகழ்வு, அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மிக முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இத் திருமண நிகழ்வுக்கு கோட்டாபாய ராஜபக்ஷவும் அழைக்கப்பட்டமைக்கு இணங்க வருகை தந்திருந்தார்.

அவரை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு அருகில், டட்சி சிறிசேன அழைத்துச் சென்று அமர்த்தினார்.

மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் சகோதரர்களும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாரியளவில் நெருக்கடிகளைக் கொடுத்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்