பதில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது: பிரதமர் தெரிவிப்பு

🕔 July 26, 2024

தில் பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் ஜனாதிபதியிடம் தற்போது இல்லை என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) விசேட உரையாற்றிய பிரதமர், பொலிஸ் மா அதிபரின் பதவி தற்போதைக்கு வெற்றிடமாகவில்லை எனவும் கூறினார்.

தேசபந்து தென்னகோன் – பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு நேற்று முன்தினம் தொடக்கம் (24ஆம் திகதி) உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை பிறப்பிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்