
2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, மேதிக படிகள் மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (12) நாடாளுமன்றில் முன்மொழிந்தார்.
2025-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அரச ஊழியர்களின் சம்பள உயர்வின் இறுதிக்கட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பின்வரும் சலுகைகளும் முன்மொழியப்பட்டுள்ளன:
– வைத்தியர்கள்: DAT படி (DAT allowance) 70,000 ரூபாவிலிருந்து 95,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
– தாதியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள்: விசேட பணிக்கொடுப்பனவு (Special duty allowance) 6,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக இருமடங்காக்கப்பட்டுள்ளது.
– பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்: மாதாந்த கல்விசார் படி (Academic allowance) 25,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
– பொலிஸ் அதிகாரிகள்: மாதாந்த உணவு மற்றும் தங்குமிடப் படியுடன் மேலதிகமாக 10,000 ரூபா வழங்கப்படுகிறது.
– சிறைச்சாலை அதிகாரிகள்: இடர் படி (Risk allowance) 8,000 ரூபாவிலிருந்து 16,000 ரூபாவாக இருமடங்காக்கப்பட்டுள்ளது.
– கிராம உத்தியோகத்தர்கள்: பயணப்படி (Travelling allowance) 1,600 ரூபாவிலிருந்து 4,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
– நிறைவேற்று அதிகாரிகள்: போக்குவரத்துப் படி (Transport allowance) 50,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபாவாக இருமடங்காக்கப்பட்டுள்ளது.
– முப்படைகள்: தினசரி உணவுப் படிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
– ஓய்வூதியதாரர்கள்: 2020-க்கும் 2024-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதாந்த இடைக்காலப் படியாக மேலதிகமாக 2,500 ரூபா வழங்கப்படும்.
பெரும்பாலான படிகளின் அதிகரிப்பு 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூலை மாதங்களில் நடைமுறைக்கு வரும். சில அதிகரிப்புகள் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்; அதன் எஞ்சிய பகுதி 2028-ஆம் ஆண்டில் வழங்கப்படும்.



