Back to homepage

Tag "உச்ச நீதிமன்றம்"

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல்

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல் 0

🕔20.Mar 2024

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 03ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை குறித்த சட்டத்தரணியை – வழக்கு நடவடிக்கைகளில்

மேலும்...
சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு 0

🕔9.Mar 2024

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரின் முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம் 0

🕔29.Feb 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து வெளியேறிய பின்னரும் கொழும்பு 07 பேஜெட் வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) ரத்து செய்துள்ளது. அதன்படி 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி இது தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்ற வகையில்

மேலும்...
தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல்

தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் கெஹலிய அடிப்படை உரிமை மனு தாக்கல் 0

🕔29.Feb 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தன்னைக் கைது செய்தமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று (29) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டு, நியாயமான காரணமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தரக்குறைவான ‘இம்யூன் குளோபுலின்’

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: உச்ச நீதிமன்றின் வியாக்கியானம் அறிவிப்பு 0

🕔20.Feb 2024

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை நிறைவேற்றிய பின்னர், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் குறித்த அறிவிப்பின் போது – அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை திருத்தங்கள் இன்றி

மேலும்...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை 0

🕔12.Feb 2024

பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகள் காரணமாக, அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பான 47 திருத்தங்கள் இன்று (பெப்ரவரி 12) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக லங்காதீப தெரிவித்திருந்தது. சட்டத்தின் 47 பிரிவுகளை மாற்றியமைப்பதற்கான திருத்தங்களை – பொதுமக்கள் பாதுகாப்பு

மேலும்...
ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு 0

🕔23.Jan 2024

ஐக்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. அதன்படி, குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

மேலும்...
பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல் 0

🕔18.Jan 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய – துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட

மேலும்...
துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா 0

🕔17.Jan 2024

தனிப்பட்ட அல்லது அரசியல் தொடர்புகள் காரணமாக – துமிந்த சில்வாவுக்கு தான் பொதுமன்னிப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுவதை முன்னாள் ஜனாதிபதி மறுத்துள்ளார். உச்ச நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த சத்திய கடதாசியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘துமிந்த சில்வாவுக்கு நான் பொதுமன்னிப்பை வழங்கவேண்டியது அவசியம் என தெரிவிக்கும் வேறு பல விடயங்கள் மற்றும் ஆவணங்கள் காணப்பட்டன’ என்றும் தனது

மேலும்...
துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு 0

🕔17.Jan 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை – உச்ச நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது. இதேவேளை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட – ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின்

மேலும்...
மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல்

மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி சஜித் மனுத்தாக்கல் 0

🕔8.Jan 2024

தற்போதைய மின் கட்டணத்தை குறைக்குமாறு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழு

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் 0

🕔30.Dec 2023

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பணியாற்றுவதைத் தடுக்குமாறு உத்ரவிடக் கோரியும், அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கோரியும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்படி மனுக்களை பேராயர் மெல்கம் ரஞ்சித், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர், ‘அரகலய’ போராட்டக்காரர் ஒருவர்

மேலும்...
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு

பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட நால்வர், 02 மில்லியன் ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Dec 2023

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளான டப்ளியூ. ரஞ்சித் சுமங்கல என்பவருக்கு 02 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக – மேற்படி

மேலும்...
சிஐடி கைது செய்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு: பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சிஐடி கைது செய்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு: பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரசியல் விமர்சகர் ரம்சி ராசிக்கின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகஉச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ராம்சி ராசிக்கிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்ததுடன், அவருக்கு 01

மேலும்...
மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு

மேன்முறையீட்டு நீதியரசர்களுக்கான இரண்டு வெற்றிடங்களுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைப்பு 0

🕔12.Nov 2023

மேன்முறையீட்டு நீதிமன்றில் இரண்டு நீதியரசர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு, மூன்று பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேல் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிபதிகளான ஜிஹான் குலதுங்க மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோரை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார். இதேவேளை, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மஹேன் கொபல்லாவவை – சட்ட மா அதிபர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்