தலைப்புச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

‘கிரிஷ்’ நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை ஒக்டோபர் 06ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழ தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில், கிரிஷ் நிறுவனத்திடமிருந்து நாமல் ராஜபக்ஷ, 70 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் ‘ஏர்பஸ்’ கொள்வனவு தொடர்பான மற்றொரு வழக்கில், அவர் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.