தலைப்புச் செய்திகள்

ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ செல்லுபடியாகாது என்று, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் பலரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, உச்ச நீதிமன்றம் பரிசீலித்ததன் பின்னர், இன்று (10) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து, 2018ஆம் ஆண்டில் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், ஞானசார தேரருக்கு 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதையடுத்து, ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.