தலைப்புச் செய்திகள்

நிறுவனம் ஒன்றின் உற்பத்தி ரகசியங்களை, வேறு நிறுவனத்துக்கு வழங்கிய முன்னாள் ஊழியருக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

ட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலையத்திலுள்ள நிறுவனமொன்றின் உற்பத்தி ரகசியங்கள்” மற்றும் வர்த்தக ரகசியங்களை- நிதி ஆதாயத்திற்காக மற்றொரு நிறுவனத்திற்கு வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பாதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் வழங்குமாறு அதன் முன்னாள் ஊழியருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்கள் ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன், உச்ச நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலையத்தில் அமைந்துள்ள கையுறை உற்பத்தி நிறுவனம், அந்த ஊழியர் நிதி ஆதாயத்திற்காகத் தனது “உற்பத்தி ரகசியங்கள்” மற்றும் “வர்த்தக ரகசியங்களை” மற்றொரு நிறுவனத்திற்கு ரகசியமாக வெளிப்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடர்ந்திருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் அந்நிறுவனத்தில் தொழில்துறை கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி வந்தார்.

அந்நிறுவனம், ரப்பர் லேடெக்ஸைப் பயன்படுத்தித் தொழில்துறை கையுறைகளை உற்பத்தி செய்வதாகவும், உற்பத்தி செயல்முறை தொடர்பான தொழில்நுட்பம் மற்றும்

பிரதிவாதி ஒரு திறமையான மற்றும் நம்பகமான ஊழியர் என்பதால், நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரகசியங்கள் குறித்து அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாகவவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றிய பிரதிவாதி, நொவம்பர் 04, 2010 அன்று அல்லது அதற்குச் சற்று முன்னதாக முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்ததாகவும், பின்னர் அதே ஆண்டு நொவம்பர் 25 திகதியிட்ட கடிதம் மூலம் தனது ராஜினாமாவை நிறுவனத்திற்குத் தெரிவித்ததாகவும் அந்நிறுவனம் கூறியது.

தனது மனுவில், பிரதிவாதி பணியில் இருந்தபோதே, ஒரு கொரிய கையுறை உற்பத்தி நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, நிதி ஆதாயத்திற்காக அதன் உற்பத்தி மற்றும் வர்த்தக ரகசியங்களை குறித்த நிறுவனத்திற்கு வெளிப்படுத்தியதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியது.

இருப்பினும், வர்த்தக மேல் நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தில், நிறுவனத்திற்குச் சொந்தமான எந்தவொரு உற்பத்தி அல்லது வர்த்தக ரகசியங்கள் குறித்தும் தனக்குத் தெரியாது என்று பிரதிவாதி கூறினார்.

மேலும், தனது கல்வித் தகுதிகள் மற்றும் பதவியின் அடிப்படையில், அத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பங்களையும் செயல்முறைகளையும் புரிந்துகொள்ளவோ ​​அல்லது கற்றுக்கொள்ளவோ ​​தனக்குத் திறன் இல்லை என்றும் அவர் கூறினார்.

நிறுவனத்தின் எந்தவொரு ரகசியத் தகவல், வர்த்தக ரகசியங்கள் அல்லது தொழில்நுட்ப உற்பத்தி விவரங்களை எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் வெளிப்படுத்தியதையும் அவர் மறுத்தார்.

அதன்பின்னர், கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம், வாதி நிறுவனம் தனது உற்பத்தி மற்றும் வர்த்தக ரகசியங்கள் பிரதிவாதிக்கு வெளிப்படுத்தப்பட்டதை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்தது.

பிரதிவாதியின் கல்விப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம், அறிவு மற்றும் வர்த்தக ரகசியங்களைப் புரிந்துகொள்ளவோ ​​அல்லது மற்றொரு தரப்பினருக்கு மாற்றவோ அவருக்குத் திறன் இல்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.

பின்னர், அந்நிறுவனம் வர்த்தக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.