
அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது.
இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக மொத்தம் 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 62 பேர் எதிராக வாக்களித்தனர். எவரும் வாக்களிப்பதிலிருந்து விலகி இருக்கவில்லை.
இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற வேண்டுமென உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியிருந்தது.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உச்ச நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும், சட்டமூலத்தை நிறைவேறற்ற வேண்டாம் எனக் கூறி, எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.



