
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் 23 வயதுடைய நபர் ஒருவர், தெமட்டகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிதம்ம மாவத்தை பகுதியில், மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (28) இரவு மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சோதனையின்போது, சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-கட்டா (T-Kata) வகையைச் சேர்ந்த நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு – இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.



