சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்

🕔 June 17, 2017

மைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரும், தமது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக, வன்முறையை தூண்டி விடுமாறு ஞானசார தேரரை ஏவினர் என்று, பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சம்பிக ரணவக்கவும், ரத்ன தேரரும் நிறைவேற்றுமாறு கூறிய வேலைகள் அனைத்தினையும் ஞானசார தேரர் செய்திருந்தால், நாட்டில் இன்னும் அதிமான வன்முறைகள் ஏற்பட்டிருக்கும் எனவும் டிலாந்த கூறினார்.

எனவே, நாட்டு விவகாரங்களில் ஞானசார தேரர் தலையிட்டமைக்கான முழுப் பொறுப்பினையும் அமைச்சர் சம்பிக ரணவக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்த தேரரும் பொறுப்பேற்க வேண்டுமெனவும் டிலந்த குறிப்பிட்டார்.

பொதுபல சேனாவின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இருக்கின்றார் என, மிக நீண்ட காலமாக பல்வேறு மட்டங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், டிலந்த விதானகே தெரிவித்துள்ள விடயங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நன்றி: டெய்லி மிரர் இணையத்தளம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்