தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

🕔 September 7, 2024

பால் மூல வாக்களிப்பின் போது, வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நடத்துமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழு இந்த முறைப்பாட்டை பொலிஸாரிடம் பதிவு செய்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்கு செலுத்தப்பட்டதாக அடையாளம் இடப்பட்ட குறித்த வாக்குச் சீட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

அதனைப் பதிவேற்றிய நபர் குறித்து விசாரணை செய்யுமாறும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்