தலைப்புச் செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு 3,000 ரூபாய் விசேட கொடுப்பனவு வழங்க தீர்மானம்

ய்வூதியதாரர்களுக்கு மாதாந்தம் விசேட கொடுப்பனவாக 3000 ரூபாயை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்தக் கொடுப்பனவு செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படுவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்படும் வரை, இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

நாட்டில் சுமார் 07 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சம்பள முரண்பாடுகள் தொடர்பில் முன்மொழிவுகளை எதிர்வரும் 09ஆம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு கோரிக்கை