தலைப்புச் செய்திகள்

குருக்கள்மடம்: சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழியை அடையாளம் காண்பதற்கான, பரிசோதனைகள் ஆரம்பம்

குருக்கள்மடம் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழியின் மண் படிம மாதிரிப் பரிசோதனைகள் (Soil Pit Test) இன்று (06) ஆரம்பமாகியுள்ளன.

முறைப்பாட்டாளர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவர் சார்பிலும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அங்கு வந்துள்ளார்.

1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் திகதி, கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக, வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பொதுமக்களை, புலிகள் அமைப்பினர் – ஆயுதமுனையில் கடத்திப் படுகொலை செய்து, குருக்கள் மடத்தில் புதைத்தார்கள் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, அங்கு புதைகுழிகளை தேடும் நடவடிக்கை இடம்பெற்றபோதும், மனித உடல்கள் எவையும் கிடைக்கவில்லை.

இந்தப் பின்னணியில்தான், தற்போது மீண்டும் அங்கு நீதிமன்ற உத்தவின் பிரகாரம் – மண் படிம மாதிரிப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன.