
ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பது – தற்போதைய அரசாங்கத்திற்கு நன்கு தெரியும் என்று அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
நன்கு அறியப்பட்ட சூத்திரதாரிகளுக்கு எதிராக அரசாங்கம் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் பங்கேற்றபோது இந்த அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து யாரும் பொய்யான அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்றும் மேலும் கூறினார்.
உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது குறித்த சரியான புரிதல் உள்ளது என்று கூறிய சந்தன அபயரத்ன, இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயன்றாலும், எந்தக் கட்சியும் உண்மையை மறைக்க அனுமதிக்கப்படாது என்றும் மேலும் தெரிவித்தார்.



