ஜனாதிபதித் தேர்தலை நிறுத்தக் கோரியவர் வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்ட 05 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டது

🕔 July 23, 2024

னாதிபதித் தேர்தலை நிறுத்துமாறு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்த சட்டத்தரணி அருண லக்சிறி – வழக்குச் செலவாக வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை, அவர் இன்று (23) செலுத்தினார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும் வரை, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த மனுவை நிராகரித்ததன் பின்னர், நீதிமன்றுக்சகு 05 லட்சம் ரூபாய் செலுத்துமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில், சட்டத்தரணி லக்சிறி இன்று (23) காலை உச்ச நீதிமன்ற அலுவலகத்தில் பணத்தை செலுத்தினார்.

சட்டத்தரணி லக்சிறி தாக்கல் செய்த மேற்படி மனுவை, கடந்த 15ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்பான செய்தி: ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்