ஜனாதிபதி தேர்தல் நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி; 05 லட்சம் செலுத்துமாறும் மனுதாரருக்கு உத்தரவு

🕔 July 15, 2024

ரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் (15) தள்ளுபடி செய்துள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறி தாக்கல் செய்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்குச் செலவாக 05 லட்சம் ரூபாயை மனுதாரர் இம்மாததம் 31ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படவில்லை எனவும், எனவே அதனை முறையாக நிறைவேற்றுவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு, அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த சட்டத்திருத்த்தை நிறைவேற்றுவதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்த போதிலும், அவ்வாறு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும்ம் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதி கையொப்பமிடாத காரணத்தினால், திருத்தத்தை சட்டமாக கருத முடியாது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்