மன்னிப்பு கேட்டு விட்டு தப்பிக்க முடியாது; இழப்பீடும் வழங்க வேண்டும்: கொவிட் கட்டாய தகனம் தொடர்பில் சஜீத் வலியுறுத்தல்

🕔 July 24, 2024

கொரோனா பாதிப்பின் காரணமாக மரணித்தவர்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்தமைக்காக மன்னிப்புக் கோருவதற்குரியஅமைச்சரவை முடிவை தான் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கட்டாய தகனத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.

“மன்னிப்பு கேட்டு தப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர், அந்த முடிவுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உண்மை, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பிரேரணையை கொண்டுவருமாறு இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அழைப்பு விடுத்தார்.

“தவறான முடிவின் பின்னணியில் குறித்தும், அந்த முடிவுக்கு யார் பொறுப்பு என்பதையும், அதற்கு ஒருவர் எவ்வாறு பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்பான கட்டுரை: கோட்டா ‘கேட்காத’ மன்னிப்பும், ரணில் ‘கேட்கும்’ மன்னிப்பும்: முஸ்லிம்களின் உணர்வுகளில் மூட்டப்படும் ‘தீ’

Comments

புதிது பேஸ்புக் பக்கம்