நியமனங்களை ரத்துச் செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

🕔 July 23, 2024

ள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களை ரத்து செய்யாதவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, பொலிஸ் மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் அபிவிருத்தி கண்காணிப்பு பணிகளுக்காக – முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும், தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் இந்த நியமனங்களை சில மாகாண ஆளுநர்கள் வழங்கியுள்ளதாக, தேர்தல்கள் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர் அண்மையில் முறைப்பாடுகளை முன்வைத்திருந்தன.

இதனையடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்புக்கமைய, கிழக்கு மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் அந்த நியமனங்களை ரத்து செய்தனர்.

எனினும் மேல் மற்றும் மத்திய மாகாண ஆளுநர்கள் இதுவரை அதற்கு எந்த வித உரிய பதிலையும் வழங்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்