Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி 0

🕔1.Apr 2024

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆரம்ப கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கீழ் நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஜுலை வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஜூலை மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படாது என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக –

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு 0

🕔18.Jan 2024

ஜனாதிபதி தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 2019 நொவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நொவம்பரில் முடிவடைவதாக கூறினார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் – தெரிவு

மேலும்...
கட்சியொன்றின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு

கட்சியொன்றின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு 0

🕔22.May 2023

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வழக்கொன்று நிலுவையில் உள்ளதால் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை, குறித்த

மேலும்...
சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில்

சட்டபூர்வமாகவே தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது: ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆணைக்குழு தலைவர் பதில் 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அழைப்பு விடுக்கப்பட்டதாக, தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைமுறைக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் இன்று (23) கூறியுள்ளார். தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு

மேலும்...
கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை திரும்ப பெற முடியாது: தேர்தல் ஆணையாாளர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குச் செலுத்தப்பட்ட கட்டுப்பணங்களை திரும்பப் பெற முடியாது என இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாத்திரமே, கட்டுப்பணத்தை மீளப் பெற முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுவதற்கு அரசாங்கம் இது தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க

மேலும்...
தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியும்: தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பை திட்டமிட்டவாறு எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் தாமதமடையுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔3.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால் மூலமாக வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலை

மேலும்...
பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார்

பதவி விலகியதாகக் கூறப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ல்ஸ், வர்த்தமானியில் கையெழுத்திட்டார் 0

🕔1.Feb 2023

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், பதவி விலகவில்லை என்று தெரியவந்துள்ளது. அண்மையில் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்ட வர்த்தமானியில் – அவர் கையொப்பமிட்டதன் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ல்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக கடந்த 25ஆம் திகதி செய்திகள் வெளியாகின. அவரது பதவி விலகல் கடிதம் ஜனாதிபதியிடம்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகின 0

🕔1.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி 0

🕔31.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் எட்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெறவுள்ளது. அந்த வகையில் 340

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை நியமிக்க அனுமதி 0

🕔27.Oct 2021

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, திருமதி சார்ல்ஸ் நியமிக்கப்படவுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பதவி வகித்த ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வி .சிவஞானசோதியின்

மேலும்...
வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம் 0

🕔11.Oct 2021

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா இன்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆளுநர் பதவியை ஏற்பதற்காக, அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்திருந்தார். ஏற்கனவே வடக்கு ஆளுநராக பதவி

மேலும்...
ஜயந்தவின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

ஜயந்தவின் பெயர் அடங்கிய ஆவணம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு 0

🕔13.Sep 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு கோரி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அவரின்ட பெயர் அடங்கிய ஆவணங்களை பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது. அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார். பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், கெட்டகொடவின் பெயர் அடங்கிய ஆவணத்தை

மேலும்...
ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு

ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டில் உறுப்புரிமைக்கு ரணில் பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு 0

🕔16.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கையளித்துள்ளார். கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப்

மேலும்...
கணிக்கறிக்கை சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகள்: அங்கீகாரத்தை ரத்துச் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

கணிக்கறிக்கை சமர்ப்பிக்க தவறிய 04 அரசியல் கட்சிகள்: அங்கீகாரத்தை ரத்துச் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை 0

🕔31.Mar 2021

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் 04 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான கணக்கறிக்கையை இதுவரை கையளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் 22 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த கட்சிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்