ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

🕔 July 25, 2024

னாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன தீர்மானித்ததாகவும், அதற்கு அவரும் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள நாமல்; அப்போது முழுமையான ஆதரவை ரணிலுக்கு பொதுஜன பெரமுன வழங்கியதாகவும், இன்றுவரை வழங்குவதாகவும் கூறினார்.

மேலும், ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட கொள்கைகள் – பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட, அவற்றுக்கு எதிராகப் பேசியதில்லை” என்றும் நாமல் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவோ அல்லது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“இருந்தபோதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக – கட்சிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசு பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான். நாங்கள் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் அரசியல் தீர்மானம் எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்