நாடாளுமன்ற உறுப்புரிமை இழந்தார் டயானா கமகே: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

🕔 May 8, 2024

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என, உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

டயானாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு- இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கிறது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்குகையில், டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்க தகுதியற்றவர் என்று தெரிவித்தனர்.

டயானா கமகேவின் குடியுரிமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கும் உரிமையை எதிர்த்து, சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

டயானா கமகே – பிரித்தானி குடியுரிமைக் கொண்டிருப்பதனால், அவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என சிவில் செயற்பாட்டாளர் தனது ரிட் மனுவில் வாதிட்டிருந்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான டயானா கமகே, அரசாங்கத்துடன் இணைந்து ராஜாங்க அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தியை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்