இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல்

🕔 May 19, 2024

லங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ்

), கொழும்பு – 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குஅருகில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 33 வயது இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிறத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கொழும்பு அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை நாளை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஈரானிய தூதுவர் நேற்று சனிக்கிழமை தனது வாகனத்தில் – வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்துக்குள் நுழைந்தபோது, இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தூதுவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதன் போது அவர் தூதுவரைத் தாக்கி விட்டு, அவருடைய வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த நேரத்தில், ஈரானிய தூதுவர் தனது காரில் இருந்து வெளியேறி, சந்தேக நபரின் வாகனத்திலிருந்த தொலைபேசியில் கையை வைத்து, பொலிஸுக்காக காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார். எனினும், சந்தேகநபர் தனது காரை முன்னோக்கிச் செலுத்தியதால் தூதுவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரை கைது செய்தனர். அவர் கொழும்பு 07 வார்ட் பிளேஸில் வசிக்கும் 33 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்