திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி 0

🕔31.May 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (31) வெளியாகியுள்ள நிலையில், திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ”குறித்த பாடசாலை மாணவிகள் – பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மறையும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழுதினார்கள் என்ற

மேலும்...
மாற்றத்தை ஏற்படுத்தும் நபருக்காக, நாம் காத்திருக்கத் தேவையில்லை: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

மாற்றத்தை ஏற்படுத்தும் நபருக்காக, நாம் காத்திருக்கத் தேவையில்லை: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔31.May 2024

மாற்றத்தினை ஏற்படுத்த இன்னொருவர் வருவார் என்று காத்திருப்பதை விடவும், நாம் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றவர்களாக, நாமே ஏன் இருக்கக் கூடாது என்று, கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் கேள்வியெழுப்பினார். சம்மாந்துறையில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த

மேலும்...
உடலுறவு கொண்ட நடிகையை அமைதிப்படுத்த, பணம் வழங்கிய வழக்கு; டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உடலுறவு கொண்ட நடிகையை அமைதிப்படுத்த, பணம் வழங்கிய வழக்கு; டொனால்ட் ட்ரம்ப் குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 0

🕔31.May 2024

ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு உடலுறவு கொண்டுவிட்டு, அதனை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பணம் கொடுத்தமை தொடர்பான வழக்கில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்டார்மி டேனியல்ஸ் எனும் ஆபாச பட நடிகையை அமைதிப்படுத்துவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், டொனால் டிரம்ப்பை  நிவ்யோக் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

மேலும்...
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் குற்றவாளி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் குற்றவாளி, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார் 0

🕔31.May 2024

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடைய ‘மிதிகம ருவான்’ என்ற பாதாள உலக நபரான ருவன் ஜயசேகர கைது செய்யப்பட்டு, துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) குழுவினால் ‘மிதிகம ருவன்’ இன்று (31) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்டர்போல் உத்தரவின் அடிப்படையில் – இந்த ஆண்டு மார்ச்

மேலும்...
சட்டவிரோத சிகரட் மற்றும் பணத்துடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது

சட்டவிரோத சிகரட் மற்றும் பணத்துடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது 0

🕔30.May 2024

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 7,000 சிகரட்களுடன் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் போது, அவரிடமிருந்து 590,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சிகரெட்டுகளை விற்றதன் மூலம் அவர் இந்தத் தொகையை சம்பாதித்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேற்படி உதவி சுங்க அத்தியட்சகர் – கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள்

மேலும்...
பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் யார்?: நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம்

பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் யார்?: நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம் 0

🕔30.May 2024

நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ள வேண்டிய தேவை உள்ள தரப்பினர்களுக்கே, பொருளாதார மாற்ற சட்டமூலத்தை எதிர்க்க முடியும் என நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையான இலக்கைக் கொண்டிருந்தாலும், ஏனைய எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தை மாத்திரம் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...
மைத்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவு

மைத்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவு 0

🕔30.May 2024

நீதிமன்றை அவமதித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், அவருக்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று (30) காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்

மேலும்...
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு அதிக இரத்த அழுத்த ஆபத்து: பரிசோதனையில் தெரிய வந்தது

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு அதிக இரத்த அழுத்த ஆபத்து: பரிசோதனையில் தெரிய வந்தது 0

🕔29.May 2024

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் – உயர் இரத்த அழுத்த அதிக ஆபத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. குளியாப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பரிசோதனையில் குளியாப்பிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள சாரதிகள் மற்றும் பேரூந்து நிலைய வர்த்தகர்கள் உட்பட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இவ்வாறு அதிக உயர் இரத்த அழுத்த

மேலும்...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில் 0

🕔29.May 2024

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும், நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
சட்ட விரோத மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு

சட்ட விரோத மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு 0

🕔29.May 2024

தம்புள்ளையில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 04 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தம்புள்ளை விஹாரை சந்தியில் பதிவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் சட்டவிரோத மதுவை உட்கொண்டதன் மூலம் இறந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் இரண்டு பேர் இன்று அதே சட்டவிரோத மதுவை உட்கொண்டதால் இறந்ததாக அப்பகுதி

மேலும்...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தொடர்பில், பொய் தகவல் வெளியிட்ட விரிவுரையாளர் கைது 0

🕔29.May 2024

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் உறுப்பினர்கள் எனக் கூறப்படுவோர் தொடர்பில், ஊடகங்களுக்கு பொய்யான அறிக்கைகளை வழங்கியமைக்காாக, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக – குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு

மேலும்...
டொக்டர் ஷாபி கட்டாய கருத்தடை செய்தார் என, நான் ஒருபோதும் குற்றம்சாட்டவில்லை: விமல் வீரசன்ச தெரிவிப்பு

டொக்டர் ஷாபி கட்டாய கருத்தடை செய்தார் என, நான் ஒருபோதும் குற்றம்சாட்டவில்லை: விமல் வீரசன்ச தெரிவிப்பு 0

🕔29.May 2024

குருநாகல் வைத்தியசாலையின் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் – பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்தார் என தான் குற்றம்சாட்டியதாகக் கூறப்படுகின்றமையை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மறுத்துள்ளார். ஒரு மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் தான் கவலைகளை எழுப்பி, விசாரணை நடத்துமாறுதான் – தாம் கோரிக்கை விடுத்ததாகவும்

மேலும்...
மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு 0

🕔29.May 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவு, ஜூன் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு, இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் பரிசீலனைக்கு

மேலும்...
55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம்: அமைச்சரவை அனுமதி

55 வயது நிறைவடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம்: அமைச்சரவை அனுமதி 0

🕔28.May 2024

பலதரப்பட்ட தொழில் துறைகளிலும் பணியாற்றும் 55 வயது நிறைந்த, அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார தெரிவித்துள்ளார். ‘கருசரு’ வேலைத்திட்டத்துக்கு இணையாக செயற்படுத்தப்படவிருக்கும் இத்திட்டத்துக்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று

மேலும்...
தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல்

தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல் 0

🕔28.May 2024

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் நாடாமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘மக்களின் விருப்பத்தின் மூலம் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்பட வேண்டுமே தவிர, அவர்களின் குரலை தாமதப்படுத்துவதன் மூலம் அல்ல’

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்