கிராம உத்தியோகத்தர் தரம் 03க்கு, 1,942 பேர் தெரிவு: 08ஆம் திகதி நியமனம்

🕔 May 6, 2024

கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

கிராம உத்தியோகத்தர் தரம் 03 க்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

www.moha.gov.lk எனும் – உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில், குறித்த பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவருக்கும் இம்மாதம் 08ஆம் திகதி காலை 10.30 மணிக்கு அலரிமாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவின் பங்குபற்றுதலுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்