எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம்: 92 ஒக்டேன் பெற்றோலுக்கு மட்டும் விலை குறைந்தது

எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம்: 92 ஒக்டேன் பெற்றோலுக்கு மட்டும் விலை குறைந்தது 0

🕔31.Oct 2023

எரிபொருள் விலைகளில் இன்று (31) நள்ளிரவு தொடக்கம் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளjதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 09 ரூபா குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 356 ரூபாவாக அமையும். அதேவேளை 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 03 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 423 ரூபாய். டீசல் விலை 03 ரூபாயினால்

மேலும்...
‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔31.Oct 2023

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம், 15 சதவீதத்தில் இருந்து 18% ஆக, அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரக் கூட்டம் நேற்று நடைபெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்கொள்ளப்பட்டது. 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அரசின் வரி

மேலும்...
காஸாவுக்குள் சுரங்கப் பாதைகளைத் தேடுவதாக இஸ்ரேல் தெரிவிப்பு: டாங்கிகளை தாக்கியழித்ததாக ஹமாஸ் அறிவிப்பு

காஸாவுக்குள் சுரங்கப் பாதைகளைத் தேடுவதாக இஸ்ரேல் தெரிவிப்பு: டாங்கிகளை தாக்கியழித்ததாக ஹமாஸ் அறிவிப்பு 0

🕔31.Oct 2023

இஸ்ரேலிய படையினர் காஸாவுக்குள் – டாங்கிகள் மற்றும் புல்டோசர்களை, கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் செலுத்தி, ஹமாஸ் போராளிகள் மற்றும் சுரங்கப்பாதைகளைத் தேடி வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் வடமேற்கு காஸாவில் முன்னேறிய இஸ்ரேலிய டாங்கிகளை தாங்கள் தாக்கியதாகவும், அதே நேரத்தில் ஒரு கட்டடத்திற்குள் இருந்த இஸ்ரேலியப் படையை வெளியேற்றியதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது. போர்நிறுத்தத்துக்கான

மேலும்...
டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி 0

🕔31.Oct 2023

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. டயானா கமகே – நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று (31) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட

மேலும்...
1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔31.Oct 2023

– அஹமட் – கல்முனை கல்வி வலயத்திலுள்ள 1200 மாணவர்களை ஒன்று திரட்டி – தனியார் மண்டபமொன்றில் நாளை பாடசாலை நேரத்தில் நடத்தவிருந்த நிகழ்வை நிறுத்துமாறு – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அரசியல்வாதியொருவரின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பொருட்டு, கல்முனை கல்வி வலய

மேலும்...
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி 0

🕔31.Oct 2023

மின்சார கட்டணத்தை 03 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – மேற்படி பிரேரணையை முன்வைத்தார். முன்பு 06 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. எனினும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு, மீளாய்வுக் காலம், 03 மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை 0

🕔31.Oct 2023

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில் ஒன்று திரட்டி, தனியார் இடமொன்றில் நிகழ்வொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் ‘மாணவர்

மேலும்...
இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்? 0

🕔30.Oct 2023

இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு, ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் – கஸ்ஸாம் படையணி இன்று (30) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், அவர்களால் ஒக்டோபர் 07ஆம் திகதி பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலியப் பெண்கள் காண்பிக்கப்பட்டுள்ளதோடு, அதில் ஒருவர் ஹிப்ரு மொழியில்

மேலும்...
ஹமாஸ் கடத்திய ஷானி லுக், சித்திரவதை செய்யப்பட்டு மரணம்: இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

ஹமாஸ் கடத்திய ஷானி லுக், சித்திரவதை செய்யப்பட்டு மரணம்: இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு 0

🕔30.Oct 2023

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஷானி லுக் (Shani Luk) எனும் 23 வயது யுவதி மரணித்து விட்டதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெர்மன் – இஸ்ரேல் இரட்டைப் பிரஜாவுரிமயைக் கொண்ட இந்த யுவதியின் மரணம் உறுதிசெய்யப்பட்டதை பகிர்ந்து கொள்வது பேரிடியாக அமைந்துள்ளதாக, இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு – தனது ட்விட்டர்

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம் 0

🕔30.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) நடைபெற்ற போது – ஜனாதிபதி இந்த விடயத்தை அங்கு தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக – இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என, அவர் குறிப்பிட்டதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்

ஐந்து வருடங்களில் உலகெங்கிலும் பலியான குழந்தைகளை விடவும், காஸாவில் மூன்று வாரங்கள் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் 0

🕔30.Oct 2023

உலகெங்கிலும் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் – மோதல்களில் கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளை விடவும், கடந்த மூன்று வாரங்களில் காஸாவில் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ‘சேவ் த சில்ரன்’ தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் குறைந்தது 8,306 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் 1,400 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள். காஸா

மேலும்...
கடுமையான தாக்குதல்களை அடுத்து, காஸா புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் வெளியேற்றம்

கடுமையான தாக்குதல்களை அடுத்து, காஸா புறநகர் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் வெளியேற்றம் 0

🕔30.Oct 2023

கடுமையான மோதல்கள் நடந்தமையினை அடுத்து – காஸா நகரின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் வெளியேறியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது என, அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகரின் தெற்கு புறநகரில் நிலைகளை எடுத்துள்ள அதேவேளை, அவர்கள் மரங்கள்

மேலும்...
அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு 0

🕔30.Oct 2023

அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஓகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். இதன்படி, 1.36 மில்லியன் குடும்பங்களுக்கான 8.5 பில்லியன் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளை மறுதினம் முதல் பயனாளிகளின் கணக்குகளில் குறித்த பணம் வைப்பிலிடப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்...
07 கோடி ரூபாய் பெறுமதியான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து மாயம்: இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம்

07 கோடி ரூபாய் பெறுமதியான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து மாயம்: இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் 0

🕔30.Oct 2023

நெற் சந்தைப்படுத்தும் அதிகாரசபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 07 லட்சம் கிலோ நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் உள்ள அரசின் 05 நெல் களஞ்சியசாலையிலிருந்து மேற்படி தொகை நெல் காணாமல் போயுள்ளதாக அவர்

மேலும்...
‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

‘லைக்கா மொபைல்’ நிறுவனத்துக்கு இலங்கைப் பெறுமதியில் 345 கோடி ரூபாவுக்கும் அதிக தொகை அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔29.Oct 2023

பணமோசடி மற்றும் வற் வரி (VAT) மோசடிக்காக ‘லைக்கா மொபைல்’ (Lycamobile) குழுமத்தின், பிரான்ஸ் நிறுவனங்களுக்கு – பரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை 10 மில்லியன் யூரோக்கள் (இலங்கைப் பெறுமதியில் 345.40 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. லைக்கா குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் டூலியும் வற் மோசடிக்கு உடந்தையாக இருந்தமைக்காக – அவருக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்