பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

🕔 April 20, 2024

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பிரித்தானியப் பெண்ணிடம் இருந்து 18 கிராம் 920 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளையும், வேனின் இலங்கை சாரதியிடம் இருந்து 02 கிராம் 600 மில்லிகிராம் ஹஷிஷையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

28 வயதான சாரதி நுவரெலியாவை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும், 35 வயதுடைய பெண் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்