இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம்

🕔 May 6, 2024

ஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை மூடுவதற்கு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஏகமனதாக வாக்களித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

காசாவில் பல மாதங்கள் நீடித்து வரும் போரில் – தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் வெளிநாட்டு ஒளிபரப்புக்களை, இஸ்ரேலில் தற்காலிகமாக மூடுவதற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியதை அடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை எடுத்தது.

‘வன்முறையைத் தூண்டும் அல்ஜசீரா ஊகத்தை இஸ்ரேலில் மூடுவதற்கு, எனது தலைமையிலான அரசாங்கம் ஏகமனதாக முடிவு செய்துள்ளது’ என்று நெதம்யாஹு அரின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமோ கர்ஹி, அல் ஜசீராவுக்கு எதிரான உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அது உடனடியாக அமலுக்கு வரும் என, எக்ஸ் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மனித உரிமைகள் மற்றும் தகவல்களை அணுகுவதற்கான அடிப்படை உரிமையை மீறும் இஸ்ரேலின் இந்த குற்றச் செயலை – அல் ஜசீரா ஊடக வலையமைப்பு கடுமையாக கண்டிப்பதாக, அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.

அல் ஜசீரா – உலகளாவிய பார்வையாளர்களுக்கு தொடர்ந்து செய்திகளையும் தகவல்களையும் வழங்குவதற்கான அதன் உரிமையை உறுதிப்படுத்துகிறது, என்றும், அந்த ஊடக வலையமைப்பு நேறறு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்