ஆசியக் கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

🕔 August 29, 2023

 ஆசியக்கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அணியின் விபரம் வருமாறு,

முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக – இறுதி அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பினுர பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாக, இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகவீனமுற்றுள்ள குசல் ஜனித் பெரேரா பூரண குணமடைந்த பின்னர் அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்