உலகக் கோப்பை செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி: இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இரண்டாமிடம்

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நோர்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா ஆகியோர் இறுதிப் போட்டியில் மோதினர்.
இதில் முதல் இரண்டு சுற்றுகளும் ட்ரோ (Draw) வில் முடிந்தன. இதனையடுத்து இன்று டைபிரேக்கர் சுற்றுகள் இடம்பெற்றன. இதன்போது கால்சன் வெற்றி பெற்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 32 வயதான மேக்னஸ் கார்ல்சன் விளையாடுவது இதுவே முதல்முறை.
அதேவேளை 18 வயதை எட்டிய பிரக்ஞானந்தா, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் மிக இளம் வயதினர் ஆவார்.