21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு தங்கம்: 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் தருஷி சாதனை

🕔 October 4, 2023

சிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில், தருஷி கருணாரத்ன இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 வருடங்களின் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த தங்கப்பதக்கம் இதுவாகும்.

தருஷி கருணாரத்ன 02 நிமிடங்கள் 3.20 செக்கன்களில் 800 மீற்றர் தூரத்தை ஓடி – முதலிடத்தைப் பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்ற முதல் தடவை இதுவாகும்.

இந்தப் போட்டியில் இந்தியா இரண்டாமிடத்தினையும் சீனா மூன்றாவது இடத்தையும் பெற்றன.

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்று வருகின்றது.

2002ஆம் ஆண்டு தமயந்தி தர்ஷா, இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை இறுதியாகப் பெற்றுக் கொடுத்தார்.

Comments