பெற்றோல் தட்டுப்பாடு; ஆட்சியாளர்களை ‘வைத்துச் செய்திருக்கும்’ சுவாரஸ்ய ‘மீம்’கள்

🕔 November 8, 2017

-அஹமட் –

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவி வருகின்றமையினை அடுத்து, அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதோடு, ஆட்சியாளர்களின் படங்களை வைத்து ‘மீம்’களும் உருவாக்கப்பட்டு, அவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டும் வருகின்றன.

அதிலும் குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவின் படங்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள’ மீம்’கள் வைரலாகப் பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவற்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வாகனத்துக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வந்திருப்பது போலவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மஹிந்தவுக்கு பெற்றோல் நிரப்பி விடுவது போலவும் உருவாக்கப்பட்டுள்ள ‘மீம்’ கலகலப்பானதாகும்.

அதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலச்சினையை வைத்தும் ‘மீம்’கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், எரிபொருள் தட்டுப்பாட்டினையடுத்து உருவாக்கப்பட்டுள்ள சில ‘மீம்’களை உங்களுக்காக வழங்குகிறோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்