காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

🕔 April 26, 2024

– நூருல் ஹுதா உமர் –

காஸா மோதலில் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு’ கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதி, இன்று (26) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

முன்னாள் ராஜாங்க அமைச்சரும், திகாமாடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த நிதி கையளிக்கும் நிகழ்வில் – முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

காஸா சிறுவர்களின் நல திட்டத்துக்காக கல்முனை கல்வி வலய உத்தியோகத்தர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் பங்களிப்பில் 312,8500/- நிதியும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தனவந்தர்களின் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 158,9000/- நிதியும், ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் 300,000/- ரூபாய் நிதியுமாக ஐந்து மில்லியன் ரூபாய் இதன்போது கையளிக்கப்பட்டது.

ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் சார்பில் – நிதியை பௌண்டஷனின் தவிசாளர் திகாமாடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கையளித்தார்.

கல்முனை கல்வி வலய நிதியை பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் தலைமையிலான பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், கணக்காளர் வை. ஹபீபுல்லா, அதிபர், ஆசிரியர் சார்பில் நவாஸ் சௌபி அடங்கிய குழுவும், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் சார்பில் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம். இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகளும் நிதிகளைக் கையளித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்