காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு

🕔 March 22, 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இன்றைய இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர் என, ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் அலி சப்ரி, மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், மற்றும அலிசாஹிர் மௌலானா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி பள்ளிவாசல் சம்மேளனம், வர்த்தக சமமேளனம், ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றதாகவும் ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமைச்சர் அலி சப்ரி மற்றும் மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் ஆகியோருக்கு – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், குரான் பிரதிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

(கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு)

தொடர்பான செய்தி: கிழக்கு ஆளுநரின் காத்தான்குடி இஃப்தார் நிகழ்வு: ஊரார் கோழி அறுத்து, உம்மா பெயரில் ஓதும் கத்தமா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்