“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

🕔 April 17, 2024

ஸ்ரேல் தனது மேற்குலக நட்பு நாடுகளின் உதவி இல்லாமல் தன்னைத் தானே தனியாளாக பாதுகாத்து கொள்ள முடியாது என்பது, ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதலின்போது நிரூபணம் ஆகியிருப்பதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சர்வதேச உறவுகளுக்கான பேராசிரியர் ஃபவாஸ் கெர்ஜஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள், ஈரானின் பல ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் அண்மைக்காலமாக தாக்குதல்களை நடத்தி வந்தமையின் முக்கிய குறிக்கோள், ஈரான் பலவீனமாக இருப்பதாகவும், மோதலை எதிர்கொள்ளத் துணியவில்லை என்றும் காட்டுவதே ஆகும். ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் இந்த கருத்தை சிதைத்து என, ஃபவாஸ் கெர்ஜஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஈரானின் இந்த நடவடிக்கை, இஸ்ரேலுக்குள் எந்தளவு ஆழத்தை அடைய முடியும் என்பதை பார்க்கவும், இஸ்ரேலிய வான் பாதுகாப்பின் தயார் நிலையை சோதிக்கவும் அதன் திறனை நிரூபிக்கும் வகையில் ஈரான் அனுப்பிய ‘நெருப்புடன் கூடிய செய்தி’ என்று, ராணுவ மற்றும் மூலோபாய நிபுணரும், பெய்ரூட்டில் உள்ள மூலோபாய ஆய்வுகளுக்கான மத்திய கிழக்கு மையத்தின் இயக்குநருமான லெபனானின் ஓய்வுபெற்ற ஜெனரல் ஹிஷாம் ஜாபர் கூறினார்.

மேலும் இந்த தாக்குதல் – ஈரான் அரசியல் ரீதியாக இழந்த கௌரவத்தை மீண்டும் பெற வழிவகுத்துக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதியன்று இஸ்ரேல் மீது ஈரான் 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்