உடல் ரீதியான தண்டனையை அனைத்து துறைகளிலும் தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 April 30, 2024

கல துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் (UNCRC) 19ஆவது உறுப்புரை, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளுக்கு எதிராகவும் பாதுகாப்பை வலியுறுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சிறுவர்களின் உரிமைகளுக்கான குழு – பொது கருத்து எண் 8 இல், உடல் ரீதியான தண்டனை அனைத்து அமைப்புகளிலும் தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்தவொரு குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ வன்முறைக்கு ஆளாகாமல் இருக்க, ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புடன் இணங்குவதை உறுதிப்படுத்தும் சட்டப் பாதுகாப்புகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழி வகுத்துள்ளதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க மேலும் விபரித்துள்ளார்.

ஏப்ரல் 30 ஆம் திகதி நினைவுகூரப்படும் ‘உடல் தண்டனையை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினத்தை’ கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்