ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் ஹமாஸ் அறிக்கை

🕔 May 20, 2024

ரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் மறைவுக்கு பலஸ்தீன போராளிக் குழு – ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சகோதர ஈரானிய மக்களுடன் சோகம் மற்றும் வலியின் உணர்வுகளை தாம் பகிர்ந்து கொள்வதாக, குறிபபிட்டுள்ளது.

‘ஹெலிகொப்டர் விபத்தில் இறந்தவர்களை – ஈரானின் மறுமலர்ச்சியில் நீண்ட பயணம் செய்த சிறந்த ஈரானிய தலைவர்களின் குழு’ என்றும் ஹமாஸ் தனது அறிக்கையில் விவரிக்கிறது.

பலஸ்தீனப் பிரச்னைக்கு அவர்கள் காட்டிய உறுதிப்பாட்டுக்கு மரியாதை செலுத்துவதாகவும் – ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின

Comments

புதிது பேஸ்புக் பக்கம்