ஈரான் பதில் ஜனாதிபதியாக முஹம்மது மொக்பர் நியமனம்: 50 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும் என ஆயத்துல்லா அலி கொமெய்னி அறிவிப்பு

🕔 May 20, 2024

ரானின் பதில் ஜனாதிபதியாக அந்த நாட்டின் உதவி ஜனாதிபதி முஹம்மது மொக்பர் (Mohammad Mokhber) நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததை அடுத்து, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் வீழ்ந்தபோது, அதில் பயணித்த ஜனாதிபதி, மாகாண ஆளுநர் உட்பட பல அதிகாரிகள் இறந்தனர்.


இதனையடுத்து ஈரானில் 05 நாட்களை தேசிய துக்க தினங்களாக அறித்துள்ள ஆயத்துல்லா அலி கொமெய்னி, 50 நாட்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்து்ளளார்.

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்