அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

🕔 May 4, 2024

டுத்த முறையும் ரணில் விக்ரமசிங்கதான் ஜனாதிபதி என்பதை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் நிரூபித்துள்ளதாக, அந்தக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டத்தில் – பெரும் எண்ணிக்கையிலான மக்களை திரட்டி, வெற்றிகரமானதொரு கூட்டத்தை நடத்தியமை, அந்தக் கட்சியிக்கான ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏனைய கட்சிகளில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்ற போதும், ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தைப் போன்றதொரு, மக்கள் திரள் நிரம்பிய வெற்றிகரமானதொரு கூட்டத்தை நடத்திக் காண்பிக்க – அவர்களால் முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனது தொகுதியிலிருந்து சுமார் 400 ஆதரவாளர்களுடன் கொழும்பில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்த அமைப்பாளர் ஆதம்லெப்பை, ”எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க – மீண்டும் ஜனாதிபதியாவார் என்பதற்கு, நடந்து முடிந்த மே தினக் கூட்டம் சான்று பகர்ந்துள்ளது” எனவும் கூறினார்.

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டை குறுகிய காலத்துக்குள் மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வினால்தான், இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாடு சிக்கலில் மாட்டிக் கொண்ட போது, அதனைப் பொறுப்பெடுப்பதற்கு அச்சப்பட்டு விலகியோடிய அரசியல்வாதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி விமர்சிப்பதற்கு எந்தவிதத் தகுதிகளும் கிடையாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் ஆதம்லெப்பை மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்