நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்

நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர் 0

🕔26.Jan 2021

நாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வரை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 59,167 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் 50,337 பேர் குணமடைந்துள்ள நிலையில் 8,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 287 பேர் மரணமடைந்துள்ளனர்

மேலும்...
எழுத்தாளர் நூறுல் ஹக் காலமானார்

எழுத்தாளர் நூறுல் ஹக் காலமானார் 0

🕔25.Jan 2021

– அஹமட் – எழுத்தாளர், ஊடகவியலாளர் – சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எம்.எம். நூறுல் ஹக் என்று திங்கட்கிழமை காலமானார். சில காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏறாவூர் வைத்தியசாலைகளில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஏறாவூரிலுள்ள அவரின் மகளின் வீட்டில் அன்னார் இன்று வபாத்தானார். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள

மேலும்...
கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம்

கல்முனையில் 27 நாட்களின் பின்னர், தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கம் 0

🕔25.Jan 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி வீடு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட்டிருந்த பகுதிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06 மணியளவில் நீக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த இப் பிரதேசங்களில் கொவிட் தொற்று  நிலைமை குறைவடைந்ததை தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  செயிலான் வீதியில் இருந்து வாடி

மேலும்...
மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி 0

🕔25.Jan 2021

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 06ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி

கொவிட் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை வியாழக்கிழமை நாட்டில் ஆரம்பமாகும்: ஜனாதிபதி 0

🕔24.Jan 2021

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். நாட்டுக்குத் தேவையான கொவிட் மருந்துகளை விரைவாக கொண்டுவருவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை

மேலும்...
கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார்

கொரோனா பாணி மருந்து ஏன் பலிக்கவில்லை: நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார காரணம் சொல்கிறார் 0

🕔23.Jan 2021

கொரோனாவுக்கு எதிரான தனது மருந்தினை பயன்படுத்தியவர்கள் மாமிசம் உண்டதாலும் மது அருந்தியதாலும், அந்த மருந்து பலிக்கவில்லை என நாட்டு வைத்தியர் தம்மிக பண்டார தெரிவித்துள்ளார். சமூகஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். குறிப்பிட்ட வீடியோவில் தனது மருந்தினை பயன்படுத்தியவர்களுக்கு ஏன் உரிய பலன்கிடைக்காமல் போனது என்பதற்கான விளக்கத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மது அருந்தினாலோ,

மேலும்...
சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை

சுகாதார அமைச்சர் பவித்ராவுக்கு கொரோனா தொற்று: தம்மிக்கவின் ‘பாணி’ குடித்தும் பலனில்லை 0

🕔23.Jan 2021

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது. “சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையைத் தொடர்ந்து கொவிட் தொற்றுக்குள்ளாகியமை தெரியவந்துள்ளதாகவும், அவர் பி.சி.ஆர் முடிவுகளுக்காக காத்திருக்கிறார் எனவும் பிபிசி சிங்கள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விவகாரம் குறித்து, சுகாதார அமைச்சு இதுவரை எந்த

மேலும்...
20 நாள் குழந்தையை தகனம் செய்தமை தொடர்பான உரிமை மீறல் மனு: விசாரணைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவிப்பு

20 நாள் குழந்தையை தகனம் செய்தமை தொடர்பான உரிமை மீறல் மனு: விசாரணைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் நவாஸ் அறிவிப்பு 0

🕔22.Jan 2021

கொரோவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, 20 நாட்களையுடைய குழந்தையை தகனம் செய்தமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைகளிலிருந்து த விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். நவாஸ் இன்று நீதிமன்றில் பகிரங்கமாக அறிவித்தார். குறித்த பிள்ளையின் பெற்றோர்களான கொழும்பில் வசிக்கும் எம்.எப்.எம். பாஹிம், என்.எம். பாத்திமா சப்னாஸ் ஆகியோர் இந்த மனுவை

மேலும்...
காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி

காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: நீதியமைச்சர் அலி சப்ரி 0

🕔22.Jan 2021

காதி நீதிமன்றங்களுக்காக காதிமார்களை இணைக்கும் தீர்மானத்துக்கும் தமக்கும் அல்லது நீதியமைச்சுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என, நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தவறான தகவல் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளது. காதி சட்டம் கடந்த 70 வருடங்களாக நாட்டில் காணப்படுகிறது. அந்த

மேலும்...
ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்த அனுமதி

ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியை இலங்கையில் பயன்டுத்த அனுமதி 0

🕔22.Jan 2021

கொவிட் 19க்கான ஒக்ஸ்போட் அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பு மருந்தை, நாட்டில் அவசரகாலத்துக்குப் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது. இதனை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, தேவையான ஒத்திகைகள் எதிர்வரும் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், தடுப்பூசி தொடர்பான ஒழுங்குமுறை பணிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், சுகாதார அமைச்சின் பிரதி

மேலும்...