காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கல்முனை கல்வி வலயம் 31 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை அன்பளிப்பு

🕔 April 22, 2024

– பாறுக் ஷிஹான் –

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா சிறுவர்களுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியத்துக்கு, 31 லட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா நிதியை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் இன்று (22) கையளித்தது.

வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீமிடம் – கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் மேற்படி தொகைக்கான காசோலையினை வழங்கினார்.

இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் உட்பட கல்வி வலய உயரதிகாரிகள்  பங்கேற்றிருந்தனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே இக்காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய – கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்வுக்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இத் தொகையானது ஜானாதிபதியின் ஆலோசனைக்கமைய திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 30ஆம் திகதி வரையே – இந்த நிதியத்துக்கு உதவி வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: காஸாவில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 01 மில்லியன் அமெரிக்க டொலர்: ஜனாதிபதி ரணில் கையளித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்