பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு தேசிய ரீதியில் முதலிடம்

🕔 March 28, 2024

– அபு அலா –

லங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதிய திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 25 லட்சத்து 59 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை சேமிப்பு தொகையாக வைப்புச் செய்து தேசிய ரீதியில் முதல் நிலையினை பெற்றுக்கொண்டது.

இதனை பாராட்டி நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் நேற்று (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பொத்துவில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி பிர்னாஸ் இஸ்மாயில் – நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட அரசாங்க அதிபரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

கடந்த வருடம் (2023) நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக – இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறுவர் ஓய்வூதியத்திட்ட ஆட்சேர்ப்பின் மூலம், பொத்துவில் பிரதேச செயலகம் 648 இலக்கையும், 4152 பேரை இணைத்து 2559300 ரூபாய் சேமிப்பு பணத்தை வைப்புச் செய்து, 640.74 சதவீதம் அடிப்படையில் செயற்பட்டு தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்