08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு

🕔 April 26, 2024

லகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு – நேற்று (25) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதற்கான நூல்களை அவுஸ்ரேலியாவிலுள்ள YM TRUST நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.

இதுவரை இந்நிறுவனமானது சுமார் 6341 புத்தகங்களை 04 கட்டங்களாக வழங்கியுள்ளது.

அனைத்து நூல்களும் இப்பிரதேசத்திலுள்ள 25 பொதுநூலகங்களுக்கும் 55 பாடசாலை நூலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நூல்களின் மொத்தப்பெறுமானம் சுமார் 08 மில்லியன் ரூபாய் என, சிரேஷ்ட உதவி நூலகரும் வெளிக்கழப்பயிற்சி இணைப்பாளருமான எம்.சி.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பின்வரும் நூலகங்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டன.

  1. நிந்தவூர் பொது நூலகம்
  2. சாய்ந்தமருது பொது நூலகம்
  3. வாசிப்பு நிலையம் வீரமுனை
  4. பொது நூலகம் ஒலுவில்
  5. அல்ஹம்றா வித்தியாலயம் ஒலுவில்
  6. சம்மாந்துறை அமிர்அலி வித்தியாலயம்
  7. மருதமுனை அல்மனார் தேசிய பாடசாலை
  8. அட்டாளைச்சேனை பொதுநூலகம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை சமூகத்துடன் இணைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஓர் அங்கமாகவே பொதுநூலகங்களை வலுவூட்டல் திட்டமானது பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாயுத்தீன் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படுகின்து.

இதற்காக SERLIN தென்கிழக்குப்பிராந்திய நூலக தகவல் வலையமைப்பானது பெரும் பங்காற்றி வருகின்றது.

மேற்படி நூல்கள் கையளிப்பு நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்,கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், பிரயோக விஞ்ஞான பீடத்தில் பீடாதிபதி கலாநிதி எச்.எம். ஹாறுன் நூலகர் எம்.எம். றிபாயுத்தீன், பதிவாளர் மற்றும் நிதியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்