மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

🕔 April 26, 2024

த்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் ‘M/s ஷௌர்யா ஏரோனாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி’ ஆகியவற்றிடம் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்துடன் ஒப்படைப்பதற்கு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்படும்.

மத்தல விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்த ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்காக கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதற்கமைய, 05 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததை அடுத்து, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்